ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 1,265 நிலைய மேலாளர்களை ரயில்வே பணியமர்த்த உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 5:45PM by PIB Chennai

இந்திய ரயில்வே,மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் 08/2026-ன் கீழ், நிலைய மேலாளர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறத்  தொடங்கியுள்ளது.

இது பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், ரயில்வேயின் செயல்பாட்டுப் பணியாளர்களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கிய முடிவாக, 2026-ம் ஆண்டு முதல் நிலைய மேலாளர் பணிக்கான அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பிரத்யேக ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ், தகுதிக்கான நிபந்தனைகள், தேர்வு நடைமுறைகள் மற்றும் பணியிட ஒதுக்கீடு குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

CEN 08/2026 அறிவிப்பின்படி, பல்வேறு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள்  மற்றும் மண்டலங்களில் மொத்தம் 1,265 நிலைய மேலாளர் பணியிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள பட்டதாரிகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329071&reg=3&lang=1    

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336919) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu , Kannada , Malayalam