இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 7:49PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில், 'தேசிய கனரக பொறியியல் கூட்டுறவு' (என்ஹெச்இசி) பன்மாநில கூட்டுறவு சங்கத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கான பூமி பூஜையை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அவர் காணொலி வாயிலாக 'கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர்' அலுவலகத்தின் மேற்கு மண்டல அலுவலகத்தைத் திறந்து வைத்ததுடன், புனேயில் 'பாரத் டாக்ஸி' சேவைகளையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திருமதி சுனேத்ரா அஜித் பவார், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு கிருஷ்ண பால் குர்ஜார், மத்திய கூட்டுறவு, சிவில் விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியல் பேசிய திரு ஷா, தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், மாவட்ட அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், பால் வளத்துறை ஆகியவை படிப்படியாக வலுவடைந்து வருவதாகக் கூறினார். மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்குதல், ஆண்டுதோறும் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வருமான வரிச் சலுகையை நீட்டித்தல் ஆகியவை அடங்கும்.
பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்திய உள்துறை அமைச்சர், ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் வேகம் பெறுவதற்கு முன்பே, ஜார்க்கண்ட் மண்ணிலிருந்து காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு உணர்வை பகவான் பிர்சா முண்டா தூண்டிவிட்டார் என்று குறிப்பிட்டார். மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நக்சலிசத்தை ஒழிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் திரு ஷா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336647®=3&lang=1
***
SK/RB/RJ