57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெயின் நாட்டின் திரைத் துறைச் சிறப்பை வெளிப்படுத்தும் நான்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 2:24PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2336668Views: 9

கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஸ்பெயின் கௌரவ நாடாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தற்கால ஸ்பெயின் திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் நான்கு திரைப்படங்கள் சிறப்புத் தொகுப்பாகத் திரையிடப்பட உள்ளன.

1. பிட்டர் கிறிஸ்துமஸ் (Bitter Christmas): இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இயக்குநர் பெட்ரோ அல்மோடோவரின் 2026-ம் ஆண்டு திரைப்படம் இது. சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் படமாக்குவதில் உள்ள சிக்கல்களை இது பேசுகிறது. கேன்ஸ், டொராண்டோ, சான் செபாஸ்டியன் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், இந்தியாவில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.

2. லுக்கிங் ஃபார் மைக்கேல் (Looking For Michael): ஜுவானா மாசியாஸ் இயக்கிய இப்படம், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கதையைச் சொல்கிறது. உலகிலேயே முதன்முறையாக இது இங்கு திரையிடப்படுகிறது.

3. தி பேட் சன் (The Bad Son): ஜெய்மே லோரெந்தே இயக்கிய முதல் திரைப்படம். குடும்ப உறவுகள், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மனக்காயங்கள் ஆகியவற்றைப் பேசுகிறது. ஆசியாவில் முதன்முறையாக இது திரையிடப்படுகிறது.

4. டிரினிடாட் (Trinidad): லாரா அல்மேயா, ஜோஸ் ஓர்துனோ இயக்கிய 2025ம் ஆண்டு திரைப்படம். 19-ம் நூற்றாண்டில் வைல்டு வெஸ்ட் பகுதிக்குத் தப்பிச் செல்லும் ஸ்பானியப் பெண், பெண் கொள்ளையர்களுடன் இணைந்து ஆபத்துகளையும் பழிவாங்கலையும் எதிர்கொள்வதே கதை. உலகிலேயே முதன்முறையாக இது இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336492&reg=3&lang=1

***

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2336668
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026