இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 12:19PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அவரது ஆட்சிக் கால அனுபவங்கள் தொடர்பாக ஐந்து தொடர் தேசியப் பயிலரங்குகளை நிதி ஆயோக் நடத்தவுள்ளது. இதில் முதல் பயிலரங்கு 2026 நவம்பர் 17 அன்று நடைபெறுகிறது. 2026 நவம்பர் முதல் 2027 அக்டோபர் வரை இந்தத் தொடர் பயிலரங்குகள் நடைபெறும்.
திரு நரேந்திர மோடி 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 12 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்த அவர், 2014 மே மாதம் பிரதமராகப் பதவியேற்றார். தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். 2026 அக்டோபர் 7 அன்று அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த அவர், இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராகத் தொடர்ந்து அதிக காலம் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அரசுப் பணிகள் மக்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கை, கடைநிலை மக்களின் முன்னேற்றம், மக்கள் பங்கேற்பு, அனைவரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சி ஆகியவை அவரது ஆட்சியின் முக்கிய அணுகுமுறைகளாக உள்ளன. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பயிலரங்குகளின் தலைப்புகளும் நடைபெறும் காலங்களும்: தலைமைத்துவம் (நவம்பர் 2026), நிர்வாகச் செயல்பாடு (ஜனவரி 2027), அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (ஏப்ரல் 2027), நாகரிக அடையாளம் (ஜூலை 2027), உலக அரங்கில் இந்தியாவின் பங்கு (செப்டம்பர் 2027).
முதல் பயிலரங்கு, 'தலைமைத்துவமே இலக்கு' என்ற தலைப்பில், புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 நவம்பர் 17 அன்று நடைபெறும். இதில் பிரதமரின் முதன்மைச் செயலர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தொடக்க உரையாற்றுகிறார். கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
2001 குஜராத் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய கட்ச் மறுசீரமைப்பு, கொவிட் பெருந்தொற்றைக் கையாண்ட விதம், லட்சாதிபதி சகோதரிகள் திட்டம், விண்வெளித் துறையைத் தனியார் பங்களிப்புக்கு அனிமதித்தது ஆகிய நான்கு அனுபவங்கள் இதில் பகிரப்படும். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தலைமைத்துவம் குறித்த கலந்துரையாடலும் நடைபெறும்.
நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ஆர். பாலசுப்பிரமணியம் பயிலரங்கின் நோக்கத்தை விளக்குவார். அமைச்சரவைச் செயலர் டாக்டர் டி.வி. சோமநாதன் நிறைவுரையாற்றி, ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் 'கர்மயோகி சங்கல்பம்' உறுதிமொழியைத் தொடங்கி வைப்பார். இதன் மூலம் அரசு அதிகாரிகள் தங்கள் தலைமைத்துவ நடைமுறையில் மாற்றம் கொண்டுவர உறுதியேற்பார்கள். இதில் சுமார் 900 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 250 பேர் நேரடிக் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336457&v=7®=48&lang=2
****
TV/PLM/RJ