சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சுகாதாரத் திட்டங்கள் குறித்த அரங்குகளை அமைத்துள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 2:47PM by PIB Chennai

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2026, புதுதில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கியுள்ளது. 2026 நவம்பர் 14 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சுகாதார அரங்குகளை நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் எம். சீனிவாஸ் தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரத் துறை செயலாளர் புண்யா சலீலா ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

‘இளைய இந்தியா, ஆரோக்கியமான இந்தியா’ என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்குகள், நோய்கள் வராமல் தடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குறிப்பாக, இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

சுகாதார அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகள் சார்பில் மொத்தம் 989 சதுர மீட்டர் பரப்பளவில் 39 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இ-சஞ்சீவனி, தேசிய தடுப்பூசித் திட்டம், காசநோய் ஒழிப்பு இயக்கம், டெலி-மானஸ் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதய, நுரையீரல் மீட்பு முதலுதவி நேரடி செயல்விளக்கம், சுகாதார உரைகள், தெருக்கூத்து, வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்காக பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெறும் தனிப் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

காசநோய் குறித்த விழிப்புணர்வு, பரிசோதனை, மருத்துவ ஆலோசனை ஆகியவற்றுக்கு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை வளர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த அரங்குகளின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336181&reg=3&lang=1

(Release ID : 2336181)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336216) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Assamese , English , Urdu , हिन्दी