இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 7:53PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர், சுகாதாரத் துறை, தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருச்சிராப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த ஜல் ஜீவன் இயக்கம் 2.0 குறித்த முதலாவது மண்டல மாநாட்டில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் கலந்துகொண்டு உரையாற்றினார். 2026 நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 7 தென் மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம், சுமார் 16 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நிலுவையில் உள்ள பணிகளை 2028 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2027 டிசம்பர் மாதத்திலேயே முடிக்க மாநிலங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேகரிப்பு, கிராம ஊராட்சிகள் தலைமையிலான நீர் மேலாண்மை ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இம்மாநாட்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அமைச்சர் திரு என். ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335598®=3&lang=1
***
TV/PD/SU