உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மீதான தடையை நீட்டித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 1:41PM by PIB Chennai

பயங்கரவாதம், தேச விரோதச் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையின்படி, ஜாகிர் நாயக் தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (ஐஆர்எஃப் - IRF) விதிக்கப்பட்ட தடையை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த அமைப்பு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டுத் தப்பி ஓடிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் தலைமையிலான இந்த அமைப்பு, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டுதல், பகைமையை வளர்த்தல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஆபத்தான கருத்துகளைப் பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்றிணைய உதவுதல், மத நல்லிணக்கத்தைக் குலைத்தல் போன்ற செயல்களிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335757&reg=3&lang=1  

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335852) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali , Assamese , Gujarati , Kannada