இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 7:14PM by PIB Chennai
நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரச்சாரம் 5.0-ன் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தலைமை பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம், விரிவான மக்கள் தொடர்பு முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை ஒருங்கிணைக்கும் இந்த ஒரு மாத கால பிரச்சாரம், 2026 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. நவம்பர் 11 நிலவரப்படி, 20.48 லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை வெற்றிகரமாகச் சமர்ப்பித்துள்ளனர்; இது பங்கேற்ற அனைத்துத் துறைகளிலும் மிக உயர்ந்த பங்களிப்பாகும்.
மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் மூலம், பாதுகாப்புப் படை ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது சான்றிதழ்களை தடையின்றியும், சிரமமின்றியும் சமர்ப்பிப்பதை எளிதாக்குவதே இந்த முன்முயற்சியின் நோக்கம் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335578®=3&lang=1
***
TV/BR/SU