இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 7:51PM by PIB Chennai
குஜராத்தின் கட்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“குஜராத்தின் கட்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு பற்றி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321535®=3&lang=1
***
TV/BR/SH