அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஜி20 நாடுகளின் அறிவியல் அகாடமிகளின் கூட்டு அறிக்கைக்கு இந்திய தேசிய அறிவியல் அகாடமி ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 12:58PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அறிவியல் 20 (எஸ்20) 2026 செயல்பாட்டின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் 10 அன்று அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் தலைமையில் ஜி20 நாடுகளின் அறிவியல் அகாடமிகள் வெளியிட்ட எஸ்20 கூட்டு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2026 டிசம்பரில் புளோரிடாவின் மியாமியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிக்கை ஜி20 அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கனமழை, நிலநடுக்கம், வறட்சி, காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் புவி கண்காணிப்பு, தொலைநுண்ணுணர்வு, ட்ரோன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.

தரவு சேகரிப்பை வலுப்படுத்துதல், பாதுகாப்பான சமமான தொழில்நுட்ப அணுகல், உள்ளூர் அளவில் திறன் மேம்பாடு, முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகிய 5 முக்கிய நடவடிக்கைகளை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335323&reg=3&lang=1   

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335514) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Telugu