இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 3:37PM by PIB Chennai
நீர் பாதுகாப்பு மக்கள் பங்கேற்பு 2.0 இணையப்பக்கத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை 2026 நவம்பர் 30 வரை ஜல்சக்தி அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்த இணையதளம் 2026 ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் நீர் பாதுகாப்பு மக்கள் பங்கேற்பு 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் சேகரிப்பு, நீர் சேமிப்பு பணிகள் குறித்த தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலநீட்டிப்பின் மூலம் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட செயற்கை நீர் நிரப்புதல், சேமிப்பு அமைப்புகள் தொடர்பான மக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க இயலும்.
நீர் பாதுகாப்பு மக்கள் பங்கேற்பு இயக்கமானது 2.0 2024 செப்டம்பர் 6 அன்று குஜராத்தின் சூரத் நகரில் பிரதமர் கூறிய நாடு தழுவிய நீர் பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்வதில் முக்கிய அம்சமாகும். மக்களின் தீவிர பங்களிப்பு மூலம் நீர் பாதுகாப்பை உண்மையான மக்கள் இயக்கமாக மாற்றுவது அதன் நோக்கமாகும். 2026 மே 31 அன்று நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1.5 கோடிக்கும் மேலான மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் நிரப்புதல், நீர் பாதுகாப்பு, நீர் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335399®=3&lang=1
***
TV/IR/SM/RJ