இடுகை இடப்பட்ட நாள்:
09 NOV 2026 6:43PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று சுமார் ரூ. 1,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், போதைப்பொருள் பயன்பாடு என்பது இளைஞர்களின் உடல், மன ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி, ஒட்டுமொத்தமாக அவர்களை சீரழித்து, பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டார். திரு மோடி தலைமையிலான அரசு, 2029 டிசம்பர் 31-க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளதாக திரு ஷா தெரிவித்தார்.
வகுப்பறையில் ஒரு குழந்தையின் நடத்தையில் மாற்றங்களைக் கவனித்து, ஆசிரியர்கள் உரிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்களைச் சந்தித்துப் பேசவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போதைப்பொருள் பழக்கத்தால் அவதிப்படும் இளைஞர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்தப் பழக்கத்திற்குச் சிகிச்சை பெறுவதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். இத்தகைய இளைஞர்களின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334427®=3&lang=1
***
SK/BR/GS