தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு இணைப்பு (துறைமுகக் கட்டணங்கள்) (மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2026 வெளியிடப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 4:24PM by PIB Chennai

தொலைத்தொடர்பு இணைப்பு (துறைமுகக் கட்டணங்கள்) (மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள் 2026-ஐ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது.

இது 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. தொலைத்தொடர்பு இணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை இணைக்கக்கூடிய தொழில்நுட்ப, செயல்பாடு, வர்த்தக ரீதியிலான ஏற்பாடுகளைக் குறிக்கும்.

திருத்தப்பட்ட ஒழுங்குமுறையின் முக்கிய அம்சங்கள்:

ஐபி போர்ட்டுகளுக்கான அங்கீகாரம்:

போர்ட் என்ற வரையறை பழைய இ-1 போர்ட்டுகள், ஐபி போர்ட்டுகள் இரண்டையும் உள்ளடக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

ஆண்டு ஐபி போர்ட் கட்டணங்களுக்கான உச்சவரம்பு:

ஒரு ஜிபிபிஎஸ் ஐபி போர்ட்டுக்கு ரூ.5.6 லட்சம், 10 ஜிபிபிஎஸ் ஐபி போர்ட்டுக்கு ரூ.42.3 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334365&reg=3&lang=1

****

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334456) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Malayalam