உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 7:41PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், குஜராத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி, மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அலுவலகங்களின் மூத்த அதிகாரிகள், மாநில உள்துறை மற்றும் தொடர்புடைய இதர துறைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது, எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பு, புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல், இணைய குற்றங்கள், பயங்கரவாதம், சட்டவிரோத குடியேற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குஜராத்தின் சுமார் 2,340 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதி, பாகிஸ்தானுடனான அதன் சர்வதேச எல்லை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு அமித் ஷா வலியுறுத்தினார். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநிலக் காவல்துறை, கடலோரக் காவல்படை, மத்திய முகமைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், சிறிய அளவிலான விற்பனையாளர்களுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்றும், ஒட்டுமொத்த போதைப்பொருள் வலையமைப்பை குறிவைத்து, அவர்களது சட்டவிரோத சொத்துகளைக் கைப்பற்றுவதற்காக நிதி சார்ந்த விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334016&reg=48&lang=2

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334166) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia