பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

100-வது வயதில் அடி எடுத்து வைக்கும் பாரத ரத்னா திரு எல். கே. அத்வானி அவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 9:07AM by PIB Chennai

பாரத ரத்னா விருது பெற்றவரும், முன்னாள் துணைப் பிரதமருமான திரு எல். கே. அத்வானி அவர்கள், இன்று தனது 100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் எழுதிய கட்டுரை ஒன்றில், இந்தியாவிற்கு அத்வானி அவர்கள் ஆற்றிய அளப்பறிய பங்களிப்பை எடுத்துரைத்துள்ளார். பிரிவினையின் கொடூரங்களை அனுபவித்தது, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையை கட்டமைத்தது, ஜன சங்கத்தை வலுப்படுத்தியது, பாஜகவை உருவாக்கியது, அவசரநிலை காலத்தின்போது ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்தது, சோமநாத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை முன்னெடுத்தது, தேசத்திற்குச் சேவையாற்றியது என அத்வானி அவர்களின் பயணத்தை பிரதமர் திரு மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

வாசிப்பதில் திரு அத்வானி அவர்களின் தீவிர ஆர்வம், கலாச்சாரம், திரைப்படங்கள் மீதான அவரது ஈடுபாடு, அத்துடன் ஒரு சிறந்த எழுத்தாளராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்தும் அக்கட்டுரையில் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“நவம்பர் 8-ம் தேதியான இன்று, ஒரு முக்கியமான நாளாகும். மதிப்பிற்குரிய திரு எல். கே. அத்வானி அவர்கள் தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்தச் சிறப்பான தருணத்தில், அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் இந்தியாவிற்கு ஆற்றிய அழியாத பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

அவரது பயணத்தை நான் நினைவு கூர்ந்துள்ளேன்; பிரிவினையின் கொடூரங்களை அனுபவித்தது முதல், மீண்டும் புதிதாக வாழ்க்கையை கட்டமைத்தது வரை; ஜன சங்கத்தை வலுப்படுத்தியது மற்றும் பாஜகவை உருவாக்கியது முதல், அவசரநிலை காலத்தின் போது ஜனநாயகத்திற்காக உறுதியாக நின்றது வரை; சோமநாத்திலிருந்து அயோத்தி வரையிலான ரத யாத்திரைக்குத் தலைமை தாங்கியது முதல், தேசத்திற்குச் சேவை செய்தது வரை அனைத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளேன்.

வாசிப்பதில் திரு அத்வானி அவர்களின் தீவிர ஆர்வம், கலாச்சாரம், திரைப்படங்கள் மீதான அவரது ஈடுபாடு, அத்துடன் ஒரு சிறந்த எழுத்தாளராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்தும் விவரித்துள்ளேன்.

ஆங்கிலம்: https://www.narendramodi.in/bharat-ratna-lk-advani-ji-at-100

இந்தி: https://www.narendramodi.in/hi/bharat-ratna-lk-advani-ji-at-100  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334063&reg=48&lang=2

****

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334103) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Malayalam