மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு இலக்கு மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 6:05PM by PIB Chennai

இந்தியாவை உலகளாவிய மின்னணு, செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உருவாக்குவதே மத்திய அரசின் இலக்கு என்று மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

‘செமிகான் இந்தியா 2.0’ திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பத் தளத்தைத் தொடங்கி வைத்தார்.

மின்னணுப் பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் புதிதாக 12 நிறுவனங்களின் திட்டங்களுக்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7,503 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், ரூ.39,045 கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். 7,127 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் துறை, வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் நிலையைக் கடந்து, பாகங்கள், மூலப்பொருட்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் அடங்கிய முழுமையான உள்நாட்டு உற்பத்திச் சங்கிலியாக வளர்ந்து வருவதாகக் கூறினார். பேட்டரி செல்கள், சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தித் திறன் அதிகரித்து வருவதாகவும், அரசின் திட்டங்கள் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். தரம், நவீனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சர்வதேசப் போட்டித்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

இன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதுவரை 16 மாநிலங்களில் 34 வகையான பொருட்களை உற்பத்தி செய்ய 118 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ.77,051 கோடியாகும். இதன்மூலம் இறக்குமதிச் சார்பு குறைந்து, உள்நாட்டு உற்பத்தி வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333716&reg=3

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333819) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Gujarati , Kannada