தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ட்ராய் சார்பில் இணைப்பு ஒப்பந்தங்களின் பதிவேடு (நான்காவது திருத்தம்) ஒழுங்குமுறைகள்-2026 அம்சங்கள் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 2:22PM by PIB Chennai
தொலைதொடர்பு துறையில் இணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொலைதொடர்பு அமைப்பை இணைக்கும் வணிக, தொழில்நுட்ப ஏற்பாடுகளை குறிக்கிறது. வெவ்வேறு சேவை வழங்கும் நிறுவனங்களின் பயனர்களும் எவ்வித தடையும் இன்றி ஒருவொருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இது வழிவகை செய்கிறது. இணைப்பு ஒப்பந்தங்களின் பதிவேடு ஒழுங்குமுறைகள் 1999 விதிமுறையானது பயனர்களின் இணைப்பு ஒப்பந்தங்களை பதிவு செய்வது, புதுப்பிப்பது தொடர்பான சட்ட கட்டமைப்பை வழங்குகின்றன. இந்நிலையில், இணைப்பு தொடர்பான தற்போதைய கட்டமைப்பை காலத்திற்கு ஏற்பவும், வெளிப்படைத் தன்மையுடனும், பயனாளிகள் பயன்பெறும் வகையிலும் புதுப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இணைப்பு ஒப்பந்தங்களின் பதிவேடு (நான்காவது திருத்தம்) ஒழுங்குமுறைகள் அம்சங்களை ட்ராய் வெளியிட்டுள்ளது.
புதிய ஒழுங்குமுறை விதிகளின்படி, அனைத்து சேவை வழங்குநர்களும் தங்களது இணைப்பு ஒப்பந்தங்களையும், அதில் செய்யப்படும் மாற்றங்களையும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ஒப்பந்தங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து உரை தேடக்கூடிய மின்னணு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பதிவேட்டை ஆய்வு செய்வதற்கான கட்டணம் ஒரு மணிநேரத்திற்கு 1500 ரூபாய் எனவும், நகல்களை ஆய்வு செய்வதற்கான கட்டணம் ஒரு பக்கத்திற்கு 500 ரூபாய் எனவும் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகள், இணைப்பு ஒப்பந்தங்களின் பதிவு, பராமரிப்பை நிர்வகிக்கும் கட்டமைப்பை நவீனப்படுத்துகின்றன. இணைப்பு ஒப்பந்தங்களின் பதிவேடு (நான்காவது திருத்தம்) ஒழுங்குமுறைகள் அம்சங்கள் குறித்து இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் விளக்க குறிப்புகளுடன் கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333541®=3&lang=1
***
SS/LN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2333749)
வருகையாளர் எண்ணிக்கை : 17