இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 12:33PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ், 4-வது அகில இந்திய சைனிக் பள்ளிகள் தேசிய விளையாட்டுப் போட்டி கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் உள்ள பிஜாப்பூர் சைனிக் பள்ளியில் 2026 நவம்பர் 3 முதல் 7 வரை நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலுமிருந்து 30 பழைய சைனிக் பள்ளிகள், 13 புதிய சைனிக் பள்ளிகளைச் சேர்ந்த 296 மாணவர்கள், 248 மாணவிகள் என மொத்தம் 544 பேர் பங்கேற்று தங்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போட்டியில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், விநாடி-வினா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2026 நவம்பர் 7 அன்று நடைபெற உள்ள இப்போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகியோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333462®=3&lang=1
***
SS/PD/SU