கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மடாலயத்தில் புத்தரின் புனிதச் சின்னங்கள்: 21,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 9:55AM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனிதப் பொருட்களை இதுவரை 21,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரில் சென்று வழிபட்டுள்ளனர். தவாங், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், துறவிகள் தொடர்ந்து இங்கு வருகை தந்து ஆசி பெற்று வருகின்றனர். பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்தப் புனிதச் சின்னங்கள் 2026 நவம்பர் 7 வரை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்தப் புனிதச் சின்னங்கள், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதால் இது மிகுந்த வரலாற்று, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் பிப்ரவா பகுதியில் 1898-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய சின்னங்கள், இந்தியாவின் பௌத்த பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தவாங் மடாலயத்தைத் தொடர்ந்து, இந்தப் புனிதச் சின்னங்கள்  நவம்பர் 8 முதல் 13 வரை பொம்டிலாவில் உள்ள மடாலயத்திலும், நவம்பர் 14 முதல் 20 வரை நம்சாயில் உள்ள தங்க அடுக்குத் ஸ்தூபியிலும் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படும். பின்னர் 2026 நவம்பர் 21 அன்று தில்லி தேசிய அருங்காட்சியகத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்படும். மத்திய கலாச்சார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்பு, அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333411&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333639) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Malayalam