இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 11:41AM by PIB Chennai
மாறுபட்ட பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்களின் சுயமரியாதையையும், அவர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளையும் உறுதி செய்யும் வகையில், ஹைதராபாத் மத்திய சிறையில் தனியாகப் பாலின சமத்துவத்துடன் கூடிய சிறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. திருநங்கைகள் நலன் தொடர்பான வழிகாட்டுதல்களை ஆய்வு செய்வதற்காக, ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளர் 2026 அக்டோபர் 8 அன்று ஹைதராபாத் மத்திய சிறையில் மேற்கொண்ட கள ஆய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு பாலின சமத்துவத்துடன் கூடிய சிறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறையில் தங்க வைக்கப்படும் நபர்கள் தங்களின் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிவதற்கும் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332858®=3&lang=1
***
AD/PD/RJ