ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவியல் அடிப்படையிலான நீர்ப்பிடிப்புப் பகுதி மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நாக்பூரில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 12:19PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறையும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மானாவாரி பகுதி ஆணையமும் இணைந்து, அறிவியல் அடிப்படையிலான நீர்ப்பிடிப்புப் பகுதி மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான 3-வது தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நாக்பூரில் 2026 நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன. நாக்பூரில் உள்ள தேசிய மண் ஆய்வு, நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலக வங்கியின் நிதி உதவியுடன் கூடிய திட்டத்தின் கீழ், தேசிய அளவிலான வரைவு தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நிகழ்வின் தொடக்க அமர்வில் உரையாற்றிய நில வளங்கள் துறையின் செயலர் திரு திலீப் குமார், நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் அறிவியல் நுணுக்கங்களுக்கும், கள அளவிலான நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் இடையே சமநிலையைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வழிகாட்டு நெறிமுறைகள் களத்தில் செயல்படுத்த முடியாத அளவிற்கு கடினமாக இருக்கக்கூடாது என்றும், மாநிலங்களின் கட்டமைப்புத் திறன்களைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு உரிய நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கும் கிராமப்புற சமூகங்களுக்கும் நேரடிப் பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். செயற்கைக்கோள் தரவுகள், தொலை உணர்வுத் தொழில்நுட்பம், நில வளப் பதிவேடுகள் மூலம் கிராம அளவில் நீர், மண் பாதுகாப்பை உறுதி செய்து, 2047-க்குள் வறட்சியைத் தாங்கும் திறன்வாய்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இத்தகைய அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்கள் அடித்தளமாக அமையும் என்று இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332894&reg=3&lang=1

***

AD/PD/RJ  


(வெளியீட்டு அடையாள எண்: 2333124) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese