மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் பொதுக்கணக்குக் குழு தலைவர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 4:20PM by PIB Chennai

நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் பொதுக்கணக்குக் குழு தலைவர்கள் மாநாடு கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.

தணிக்கை, பொறுப்புக்கூறல், நல்லாட்சி - பொதுக் கணக்குக் குழுவின் வளர்ந்து வரும் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வழங்கப்பட்ட பொது நிதிகள், அவை செலவிடப்பட்ட சரியான சேவை அல்லது நோக்கத்திற்காக சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மதிப்பிடுவதற்கும், அதன்மூலம் பொதுக் கருவூலத்தைப் பாதுகாப்பதற்கும் கடுமையான பரிசோதனைத் தரங்களை நிலைநிறுத்துதல்.

டிஜிட்டல் வலைதளத்தை உருவாக்குவதன் மூலம், நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேசங்களின் பொதுக் கணக்குக் குழுக்களுக்கு இடையே தொடர்ச்சியான சக கற்றல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், நடைமுறைப் புதுமைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கான ஒரு வலுவான வழிமுறையை நிறுவுதல்.

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் தணிக்கைப் பத்திகள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்ட குறிப்புகள், பொதுக் கணக்குக் குழுக்களின் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்குதல்

அனைத்து மாநில/யூனியன் பிரதேச பொதுக் கணக்குக் குழுக்களிலும் தணிக்கைப் பத்தி கண்காணிப்பு அமைப்பு போன்ற ஒரு டிஜிட்டல் மேற்பார்வை அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்தல்.

சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழக்கமான பயிற்சிகள்/ அறிமுக அமர்வுகளை நடத்தி, பொதுக் கணக்குக் குழுவின் செயலகங்களின் நிறுவனத் திறனை மேம்படுத்துதல், சிக்கலான தொழில்நுட்ப, நிதிச் சிக்கல்களை ஆராய்வதற்கான பகுப்பாய்வுக் கருவிகளை உறுப்பினர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332530&reg=3&lang=1&_gl=1   

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332952) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada , Malayalam