இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 4:08PM by PIB Chennai
சட்டப்பேரவைகளின் கண்காணிப்பை பயனுள்ளதாக்கும் வகையில், தணிக்கை, மதிப்பீட்டிற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற, நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் பொதுக் கணக்குக் குழுத் தலைவர்களின் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக் குழுக்களின் செயல்பாட்டில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றக் குழுக்களுக்கு ஏற்கனவே உள்ள தளத்தைப் போன்று, மாநில சட்டப்பேரவைகளுக்கும் பொதுவான டிஜிட்டல் தணிக்கை கண்காணிப்பு தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய தளம், தணிக்கை சார்ந்த முன் கணிப்புகளை முறையாகக் கண்காணிக்கவும், அவற்றைப் பின்பற்றி அதற்கான வழிமுறைகளை வலுப்படுத்தவும், தணிக்கை அறிக்கைகளை உரிய நேரத்தில் ஆய்வு செய்து தீர்வு காணவும் உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம் என்பது நிறுவன மாற்றத்திற்கான கருவியாக இருக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது சட்டப்பேரவைக் கண்காணிப்பின் திறன், வெளிப்படைத்தன்மை, செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
அதே வேளையில், தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதில் ஒரு எல்லை இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எப்போதும் மனித விழுமியங்கள், அறிவு, உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் நிறுவனங்களின் பொறுப்புக்களை வலுப்படுத்தவும், முடிவெடுக்கும் தரத்தை மேம்படுத்தவும் உதவ வேண்டுமே தவிர, அது மனிதர்களின் தீர்ப்பு, பகுத்தறிவுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று திரு ஓம் பிர்லா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332521®=3&lang=1&_gl=1
(Release ID: 2332521)
****
SK/SV/SH