பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய - இலங்கை கடலோர காவல்படை இடையேயான 9-வது உயர்நிலைக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 6:30PM by PIB Chennai

இந்திய - இலங்கை கடலோரக் காவல்படை இடையேயான 9-வது உயர்நிலைக் கூட்டம், 2026 நவம்பர் 3 அன்று நடைபெற்றது.

இலங்கையின் மிரிசாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் திரு பரமேஷ் சிவமணி தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவும், இலங்கை கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன தலைமையிலான இலங்கை குழுவும் பங்கேற்றது.

இந்தக் கூட்டத்தில், கடல்சார் மாசு தடுப்பு, கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பணிகள், கடல்சார் சட்ட அமலாக்கம் உள்ளிட்ட பரஸ்பரம் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படைகளுக்கு இடையேயான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவி தொடர்பான முன்னெடுப்புகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332184&reg=3&lang=1

***

SK/SV/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2332463) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Malayalam