சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 6:17PM by PIB Chennai
தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதி முறைகளின்படி, தேசிய பல் மருத்துவ ஆணையம், அதன் மூன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட வாரியங்களுக்கான பகுதிநேர உறுப்பினர்களைக் குலுக்கல் முறையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தத் தேர்வு நடைமுறையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்யா சலீலா ஸ்ரீவாஸ்தவா கலந்துகொண்டார்.
இரண்டு ஆண்டு பதவிக்காலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனங்களில், மாநில/யூனியன் பிரதேச அரசுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து பகுதிநேர உறுப்பினர்களும், மாநில பல் மருத்துவக் கவுன்சில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது பகுதிநேர உறுப்பினர்களும் அடங்குவர். மேலும், ஆணையத்தின் மூன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட வாரியங்கள் ஒவ்வொன்றிற்கும், இரண்டாவது பகுதிநேர உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் இதில் அடங்கும்.
மாநில பல் மருத்துவக் கவுன்சில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது பகுதிநேர உறுப்பினர்கள் நாகாலாந்து, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேகாலயா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாநில/யூனியன் பிரதேச அரசுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து பகுதிநேர உறுப்பினர்கள் சிக்கிம், ஜார்க்கண்ட், கேரளா, உத்தரகண்ட், மிசோரம், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332176®=3&lang=1
***
SK/SV/PS