மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் மாநிலத்தில், நுண்ணுயிரியல் ஆய்வகத்தை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 6:14PM by PIB Chennai

சிக்கிம் மாநிலம் பால் உற்பத்தியில் 79% வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் காங்டாக்கில், நுண்ணுயிரியல் ஆய்வகத்தையும்,சுர்பி தடமறிதல் முயற்சி, தீவனம், உழவர் உற்பத்திப் பொருட்களுக்கான அலகுகளையும் தொடங்கி சாய்த்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், பால் உற்பத்தி நாளொன்றுக்கு 1.37 லட்சம் லிட்டரிலிருந்து 2.45 லட்சம் லிட்டராக, அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், பால் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 2014-15-ம் ஆண்டில், 389-ஆக இருந்ததிலிருந்து, 2025–26-ல் 733-ஆக, அதாவது 88 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி பால் அளவும் 28,000 லிட்டரிலிருந்து 56,000 லிட்டராக இருமடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

உள்நாட்டு 'சிரி' ரக கால்நடைகளுக்கான சீர்மிகு மையம் மற்றும் மங்கன் பால் பண்ணை ஆலை நவீனமயமாக்கல் திட்டம் ஆகியவை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332174&reg=3&lang=1

***

SK/SV/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2332460) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Assamese , Bengali