இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 11:48AM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழுள்ள தேசிய நில பணமாக்குதல் கழகம் (என்எல்எம்சி) விசாகப்பட்டினத்திலுள்ள எஃகு ஆலையைச் செயல்படுத்தும் ஆர்ஐஎன்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை மின்னணு ஏலம் வாயிலாக விற்பனை செய்வதன் இரண்டாம் கட்டத்தை 2026 நவம்பர் 3 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த இரண்டாம் கட்ட வெற்றி உபரியாக உள்ள பொதுச் சொத்துக்களை முறையாக, வெளிப்படையாக, போட்டித்தன்மையுடன் கூடியதாக, தொழில்நுட்பம் சார்ந்த ஏல நடைமுறைகள் மூலம் பணமாக்குதல் முயற்சியில் என்எல்எம்சி-யின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இந்த ஏலத்தின் வாயிலாக ரூ.218 கோடி மதிப்பிலான 114 நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படை விலை ரூ.184.8 கோடி ஆகும். அடிப்படை விலையை விட 17.96 சதவீதம் அளவிலான கூடுதல் விலைக்கு நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது ஏல நடவடிக்கையில் நிலவிய போட்டியையும், சந்தை அடிப்படையில் விலையைத் தீர்மானிக்கும் திறனையும் காட்டுகிறது.
இம்முடிவுகள் விசாகப்பட்டினத்தில் சிறந்த பகுதிகளில் உள்ள நிலங்கள் தொடர்பாக சந்தை நிலவரத்தை வெளிப்படுத்துகிறது. அத்துடன் உபரியாக உள்ள பொதுச் சொத்துகளின் பொருளாதார மதிப்பீட்டை மீட்டெடுப்பதில் வெளிப்படையான போட்டித்தன்மைமிக்க மின்னணு ஏல முறையின் பயன்களை இது உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332381®=3&lang=1
***
AD/IR/SM/PS