பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 4:33PM by PIB Chennai
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ், ஓய்வூதியதாரர்கள் பிறரை சார்ந்திராமல் சேவைகளைப் பெற அதிகாரம் அளிக்கிறது.
ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்து, நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 5-ன் கீழ், இன்று புது தில்லியில் உள்ள அதன் கிளையில், மாபெரும் முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முகாம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தின் மூலம், தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க உதவுவதையும், டிஜிட்டல் சேவைகளின் வசதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த முகாமில் உரையாற்றிய ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா, ஓய்வூதியதாரர்களுக்கான சேவையை மையமாகக் கொண்டு, துறை சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உட்பட, அனைத்து ஓய்வூதியதாரரையும் சென்றடைவதைப் பொறுத்து, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்தின் வெற்றி அமையும் என்று குறிப்பிட்டார்.
மூத்த ஓய்வூதியதாரர்களின் பங்கேற்பிற்குப் பாராட்டுத் தெரிவித்த செயலாளர், முந்தைய பிரச்சாரத்தின் போது 80 வயது, அல்லது அதற்கு மேற்பட்ட 14 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332070®=3&lang=1
****
SK/SV/RJ