வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து 1.5 மெட்ரிக் டன் கிவி பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 4:39PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் ஜிரோவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு 1.5 மெட்ரிக் டன் கிவி பழங்களை சோதனை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் உதவியது. ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த சரக்கு துபாயை அடைந்ததோடு அங்குள்ள அல் குசாசில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இது சர்வதேச சந்தைகளில் இந்த வகை பழத்திற்கான வாய்ப்புகளை மதிப்பிடுவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி அருணாச்சலப் பிரதேசத்தின் தனித்துவமிக்க அடையாளம் கிவி என்ற அடிப்படையில் அருணாச்சலப் பிரதேசத்தின் கிவி பழங்களின் உற்பத்தி துறையை மேம்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச வர்த்தக மற்றும் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இம்முயற்சி, அம்மாநிலத்தின் கிவி பழங்களை சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதையும், நுகர்வோரின் வரவேற்பை மதிப்பீடு செய்வதையும், உள்ளூர் விவசாயிகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும் வலுவான சந்தை தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332077&reg=3&lang=1

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332259) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu