தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு (மூன்றாவது திருத்த) ஒழுங்குமுறை விதிகளை ட்ராய் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 12:37PM by PIB Chennai

தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு (மூன்றாவது திருத்த) ஒழுங்குமுறை விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இன்று வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் ஒருங்கிணைப்பு என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளை இணைக்கும் தொழில்நுட்பம், செயல்பாட்டு,  வணிக ரீதியான ஏற்பாடுகளைக் குறிக்கிறது.

இது தொலைத்தொடர்பு சேவைகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெறவும், வெவ்வேறு சேவை வழங்குநர்களின் பயனர்கள் தடையின்றி தொடர்புகொள்ளவும் வகை செய்கிறது. 1997-ம் ஆண்டின் ட்ராய் சட்டத்தின் பிரிவு 11(1)(பி)-ன் கீழ், சேவை வழங்குநர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கான விதிமுறைகள், நிபந்தனைகளை வகுக்கவும், பல்வேறு சேவை வழங்குநர்களுக்கு இடையே தொழில்நுட்ப பயன்பாட்டுத் தன்மையையும் ஆக்கபூர்வமான வகையில் ஒருங்கிணைப்பதை உறுதி செய்யவும் ட்ராய்-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒருங்கிணைப்பு தொடர்பான தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பு, காலத்திற்கு ஏற்ற வகையில், வெளிப்படைதன்மை கொண்டதாகவும், சேவை வழங்குநர்களுக்கு இடையே திறமையான ஒன்றிணைப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதை உறுதிசெய்ய, மறுஆய்வு செயல்முறையைத் தொடங்குவது குறித்து 03.04.2025 அன்று  முன்-ஆலோசனை ஆவணத்தை ட்ராய் வெளியிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331941&reg=3&lang=1

(Release ID: 2331941)

***

AD/SV/SH 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2332038) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Kannada , English , Gujarati , हिन्दी , Malayalam