மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

சிறந்த நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கு மாற்றுக் கருத்துக்களை வரவேற்று மதிப்பளிக்க வேண்டும்- மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 3:20PM by PIB Chennai

ஆரோக்கியமான, துடிப்புடன் கூடிய ஜனநாயகத்தில் கருத்தை ஏற்றுக்கொள்வதும், புறக்கணிப்பதும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். புதிய கண்ணோட்டங்களுக்கும், நிர்வாக ரீதியிலான குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதற்கும், சிறந்த நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும் மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்படுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுனார்.

அரசியல், கட்சி அல்லது கொள்கை வேறுபாடுகள் இருப்பினும் மாநிலம், தேசம் ஆகியவற்றின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பணியாற்றுவது மக்கள் பிரதிநிதிகள் அனைவரது முதன்மையான கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹரியானா சட்டப்பேரவை சார்பில் பஞ்ச்குலாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பிரதிநிதி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு ஓம் பிர்லா, கடந்த 60 ஆண்டுகளில் ஹரியானாவின் வளர்ச்சி, பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தலைமைத்துவம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். அம்மாநிலத்தின் பிரமிப்புமிக்க சாதனைகள் இந்தியாவின் அரசியல் சாசன மாண்புகள், ஜனநாயக நெறிமுறைகளின் கட்டமைப்பிற்கு உட்பட்டவை என்று அவர் கூறினார்.

கடந்த 60 ஆண்டுகளில் அம்மாநிலத்தின் பரிணாம வளரச்சியை சுட்டிக்காட்டிய திரு ஓம் பிர்லா, பல்வேறு வரலாற்று ரீதியிலான நிர்வாகச் சவால்கள் இருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்தில் ஹரியானா தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார்.

பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள செயல் தொடர்பான காலத்தால் அழியாத கூற்றை நினைவுகூர்ந்த அவர், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை முதன்முறையாக ஏற்றுக்கொண்டு பயிர் விளைச்சல்களை அதிகரித்து நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ள வேளாண் சமூகத்தினரை பாராட்டினார்.

நாட்டின் எல்லைகளையும், உள்நாட்டு பாதுகாப்பையும் காப்பதில் முன்மாதிரியான வீரத்தை வெளிப்படுத்தியதற்காக ஹரியானா இளைஞர்களை பாராட்டினார். அத்துடன் உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பெருமையை தொடர்ந்து உயர்த்தும் ஹரியானா மாநில விளையாட்டு வீரர்களையும் அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331537&reg=48&lang=1

***

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331706) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati