விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அறிவியல், கூட்டாண்மை வார விழா

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 2:29PM by PIB Chennai

சர்வதேச வேளாண் ஆராய்ச்சி குறித்த ஆலோசனை குழு, மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து சர்வதேச அளவில் வேளாண்துறையை மேம்படுத்துவது தொடர்பான அறிவியல், கூட்டாண்மை வார விழாவை 2027 ஏப்ரல் 12 முதல் 17-ம் தேதி வரை நடத்துகின்றன.

புதுதில்லியில் நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்திய வேளாண்மை மாற்றத்திற்காக சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளில் இந்தியா இணைந்து செயல்படுவதே இந்த விழாவின் நோக்கம். வேளாண் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, சர்வதேச வேளாண் ஆராய்ச்சி ஆலோசனை குழுவுடன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகிறது. 10 சர்வதேச வேளாண் ஆராய்ச்சி ஆலோசனை மையங்கள் இந்தியாவில் செயல்பட்டு வரும் நிலையில், சாகுபடி, நீர் மேலாண்மை, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.  சர்வதேச நாடுகளுடன் இணைந்து வேளாண் துறையை பலப்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்துவது குறித்து இந்த அறிவியல், கூட்டாண்மை வார விழாவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330371&reg=48&lang=1&_gl=1

***

SS/LN/ SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2330696) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , Telugu , English , Urdu , हिन्दी , Gujarati