இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 7:07PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 அக்டோபர் 31, நவம்பர் 1 தேதிகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 31-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறும் சிம்ஹஸ்த மஹா கும்பத்தின் த்வஜ் ஸ்தம்ப பூஜை, தவஜ பூஜை, த்வஜாரோஹண விழா ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றவுள்ளார்.
நவம்பர் 1-ம் தேதி, ஹரியானா மாநிலம் உருவானதன் 60 ஆம் ஆண்டு விழாவான 'ஹிரக் ஜெயந்தி' கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் குருக்ஷேத்திரத்தில் கலந்துகொள்கிறார் . மேலும், குருக்ஷேத்திரத்தில் சுவாமி ஸ்ரத்தானந்த்தின் தியாக நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வருடாந்திர விழாவிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330584®=3&lang=1
(Release ID : 2330584)
****
SK/PLM/SH