பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்: நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 1:35PM by PIB Chennai

மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில், 5-வது தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் நாடு முழுவதும் 2 ஆயிரம் நகரங்கள், மாவட்டங்களில் 2026 நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த பிரச்சாரத்திலேயே இதுவே மிகப்பெரிய முன்னெடுப்பாகும். ஓய்வூதிய தொகை விடுவிக்கும் வங்கிகள், இந்திய அஞ்சல் பணம் செலுத்தும் வங்கி, ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கங்கள், தொலைதொடர்புதுறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி துறை, மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. 

குறிப்பாக, முக அங்கீகார தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உதவியுடன், இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்பட உள்ளது. மூத்த குடிமக்களுக்கு எவ்வித சிரமும் இன்றி முக அங்கீகாரத்தை பதிவு செய்ய ஆண்ட்ராய்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டி.டி., அகில இந்திய வானொலி, பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. குறுஞ்செய்தி, சமூக வலைதள பதிவுகள் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வீடுகளுக்கே சென்று ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்டறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2.30 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330361&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330566) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu , Kannada