தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய பொது மன்னிப்புத் திட்டத்தை இஎஸ்ஐசி 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 9:21AM by PIB Chennai

தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆய்வு செய்ததையடுத்து 2025 அக்டோபர் 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரை அமலில் இருந்த புதிய பொது மன்னிப்புத் திட்டம் 2025-ஐ தற்போதைய விதிமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் மேலும் மூன்று மாதங்களுக்கு 2026 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

பொது மன்னிப்புத் திட்டம் என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதையும், இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குறைதீர்ப்பாகும். இத்திட்டம்,இஎஸ்ஐசி-உடனான சட்ட சிக்கல்களுக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண உரிய வழிமுறையை அளிக்கிறது.

அதன்படி தற்காலிக மதிப்பீடுகளை உண்மையான பங்களிப்புத் தொகை, வட்டியுடன் செலுத்தலாம். அபராதம் ஏதும் விதிக்கப்படாது. நிலுவைத் தொகையை ஏற்கனவே செலுத்திவிட்ட தொழிலாளர் அபராத தொகையில் 10 சதவீதத்தை  செலுத்தி தங்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற முடியும். ஆவணங்களை சமர்பிக்க தவறியது அல்லது தொகையை தாமதமாக செலுத்தியது தொடர்பாக இஎஸ்ஐசி தொடர்ந்த வழக்குகளில் பின்னர் விதிமுறைகளுக்குட்பட்டு இருந்தால் அந்த வழக்குகளும் நீதிமன்ற அனுமதியுடன் திரும்ப பெறப்படும்.

2025 மார்ச் 31 வரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவை ஆகும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329854&reg=3&lang=1

***

SS/IR/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330000) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Telugu , Malayalam