பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லிக்டென்ஸ்டைன் இளவரசர் அலாய்ஸை பிரதமர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 11:07PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி லிக்டென்ஸ்டைன் இளவரசர் அலாய்ஸை சந்தித்தார்.

இந்தியா – லிக்டென்ஸ்டைன் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாக திரு மோடி குறிப்பிட்டார்.

இந்திய – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் ஏற்பட்டு ஒராண்டு நிறைவுற்றுள்ள நிலையில் அதனுடைய முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வுசெய்தனர். அத்துடன் முதலீட்டை அதிகரிப்பது, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

லிக்டென்ஸ்டைன் இளவரசர் அலாய்ஸூடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது.

பல்வேறு துறைகளில் இந்தியா – லிக்டென்ஸ்டைன் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

இந்திய – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் ஏற்பட்டு ஒராண்டு நிறைவுற்றுள்ள நிலையில் அதனுடைய முன்னேற்றம் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்.

***

(Release ID: 2329273)

SS/IR/LDN/PS 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2329948) வருகையாளர் எண்ணிக்கை : 8