இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 11:04AM by PIB Chennai
கொல்கத்தா ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்ட 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈ சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேபாளத்தில் இருந்து வந்த கப்பலில் இரண்டு பெட்டகங்களின் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். அப்போது ஒரு பெட்டகத்தில் 40 ஆயிரம் ஈ சிகரெட்டுகளும், மற்றொரு பெட்டகத்தில் 15 ஆயிரம் ஈ சிகரெட்டுகளும் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடியாகும். 2026 - 27-ம் ஆண்டு நிதியாண்டில் மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.120 கோடி மதிப்பிலான சுமார் 3 லட்சம் ஈ சிகரெட்டுகள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329318®=3&lang=1
***
SS/IR/LDN/GS