கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்களில் முதலீடு செய்யுமாறு கொரிய நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 7:55PM by PIB Chennai

தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற உலக கடல்சார் தின வட்டமேஜை மாநாட்டில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் பங்கேற்றார்.

 

அப்போது, அனைத்து நாடுகளாலும் பின்பற்றக்கூடிய உலகளாவிய கப்பல் போக்குவரத்து விதிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கொரிய கடல்சார் உபகரணங்கள் சங்கம் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர், இந்தியாவின் கப்பல் கட்டும் துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

 

இந்தியாவில் கப்பல் கட்டும் துறை வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், அக்டோபர் 30 அன்று மும்பையில் கொரிய கடல்சார் உபகரணங்கள் சங்கம் தனது முதல் இந்திய அலுவலகத்தைத் திறக்கிறது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 23 பில்லியன் டாலர் மதிப்பிலான 400-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328701&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2328701

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329147) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati