இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 6:22PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எனது இளம் இந்தியா (மேரா யுவ பாரத்), “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்” இயக்கத்தின் கீழ் நடைபெறும் 100 வாரப் பிரச்சாரத்தின் ஆறாவது வாரத்தில், 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 694 நிகழ்ச்சிகள் மூலம் 2,11,139 இளைஞர்களும் குடிமக்களும் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில், கலாச்சார நிகழ்வுகள், உடற்பயிற்சி, சமூக உரையாடல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஃபிட் இந்தியா, பிரம்ம குமாரிகள் அமைப்பு, ஃபிக்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தக் கூட்டு அணுகுமுறை, இளைஞர் வலையமைப்புகள், சமூக நிறுவனங்கள், கூட்டாளர் அமைப்புகளை ஒன்றிணைத்து, பிரச்சாரத்தின் எல்லையை விரிவுபடுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கவும் வழிவகுத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328628®=3&lang=1
***
TV/BR/SH