மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படைப்பாற்றல் போட்டி வெற்றியாளர்களை மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கௌரவிக்க உள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 1:48PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படைப்பாற்றல் போட்டியின் நிறைவு விழா மற்றும் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

புதுதில்லியில் நாளை (அக்டோபர் 28, 2026) நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்கிறார்.

இந்தியாவின் பள்ளி கல்வி, அடிப்படை அளவிலான புத்தாக்க முயற்சிகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படைப்பாற்றல் 2025 போட்டி, மிகப்பெரிய புத்தாக்கத் தீர்வுப் போட்டி என்ற பிரிவில், கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இது இந்திய இளைஞர்களை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தேசிய அளவில் வெற்றி பெற்ற 10 குழுக்கள், புத்தாக்கக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பெருமைப்படுத்தப்படவுள்ளனர். அவர்களது மாற்றத்தை உருவாக்குவதற்கான தீர்வுகள், மாதிரிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வும் இதில் இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில் உல்லாஸ் - நவ பாரத கல்வியறிவுத் திட்டத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328881&reg=3&lang=1

***

SS/SV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2328960) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati