இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 1:45PM by PIB Chennai
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபுவில் 2026 அக்டோபர் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 13-வது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் (ஏடிஎம்எம்) – பிளஸ் கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியக் குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமைத் தாங்குகிறார். அங்கு அவர் பிராந்திய, சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்களில் கருத்து பரிமாற்றம் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
இக்கூட்டத்திற்கு, இடையே பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அவர் இரு தரப்பு பேச்சு நடத்த உள்ளார். அந்நாடுகளுடனான தற்போதைய பாதுகாப்புச் சார்ந்த உறவுகளை ஆய்வு செய்து, உத்திசார் கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகளையும் அவர் ஆராய உள்ளார். ஆசியான் அமைப்பில் பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனைகள், ஒத்துழைப்பிற்கான மிக உயர்ந்த அமைப்பான ஆசியன் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ஏடிஎம்எம்) திகழ்கிறது. ஏடிஎம்எம் –பிளஸ் என்பது ஆசியன் உறுப்பு நாடுகள் (புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோ, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, தைமூர் லெஸ்தே, வியட்நாம்), அதன் உரையாடலில் பங்கேற்கும் நாடுகள் (இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) ஆகியவற்றுக்கிடையேயான ராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.
இந்தியா ஆசியன் அமைப்பில் 1992-ம் ஆண்டில் உரையாடல் கூட்டாண்மை நாடானது, முதலாவது ஏடிஎம்எம் – பிளஸ் கூட்டம் 2010-ம் ஆண்டு அக்டோபர் 12 அன்று ஹனோ-யில் நடைபெற்றது. 2017-ம் ஆண்டு முதல் ஆசியன், அதனுடைய உரையாடலில் பங்கேற்கும் நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏடிஎம்எம் – பிளஸ் அமைப்பு அமைச்சர்கள் ஆண்டுதோறும் கூடுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328397®=3&lang=1
***
SS/IR/SM/SH