அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அமைப்புகள், செயற்கை உயிரியல் துறையில் புதிய வாய்ப்புகள்: இஎஸ்டிஐசி 2026 மாநாட்டின் முன்னோட்ட நிகழ்ச்சி தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 11:31AM by PIB Chennai

மரபணு பொறியியல், உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைப் படைப்புகளுக்கான மாநாட்டின் முன்னோட்ட நிகழ்ச்சியைப்  புதுதில்லியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் “அமைப்புகள் மற்றும் செயற்கை உயிரியல்” என்ற தலைப்பில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில், உயிரித் தொழில்நுட்பத்தில் புதுமை, மேம்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் உயிரி தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் கோபர்தன் தாஸ் பேசுகையில், இந்தியாவில் வளர்ந்து வரும் அறிவியல் திறனை முன்னெடுத்து செல்வதிலும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் உயிரித் தொழில்நுட்பம் உறுதுணையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் உயிரி தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328337&reg=3&lang=1

***

SS/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2328435) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese , Telugu