பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரேசில் அதிபர் தேர்தலில் வென்ற திரு லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா–வுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 11:49AM by PIB Chennai

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா–வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளை இன்று தெரிவித்தார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – பிரேசில் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்ற திரு மோடி விருப்பம் தெரிவித்தார். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், வளரும் நாடுகளின் பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேம்படுத்தும் என்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமிக்க, நிலைத்தன்மைக் கொண்ட உலகை நோக்கி பணியாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

"மறு தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்ற எனது நண்பரும் அதிபருமான லுலாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – பிரேசில் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

நாம் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம், வளரும் நாடுகளின் பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேம்படுத்துவோம், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமிக்க, நிலைத்தன்மைக் கொண்ட உலகை நோக்கி பணியாற்றுவோம்".

***

(Release ID: 2328341)

SS/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2328367) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Odia , Kannada , Malayalam