ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தின் சத்னா-தேவேந்திரநகர், ரேவா-சுர்ஹத் ரயில் பாதைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கப்பட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2026 8:11PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் விந்தியப் பிராந்தியத்தில் ரயில் இணைப்பை விரிவுபடுத்துவதில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோர் முன்னிலையில், சத்னா-தேவேந்திரநகர், ரேவா-சுர்ஹத் ரயில் பாதைகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, புதிய தேவேந்திரநகர்-சுர்ஹத் பயணிகள் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், புதுதில்லியிலிருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

விழாவில் பேசிய அமைச்சர், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் இணைப்பு விரிவாக்கப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக, பாம்பன் பாலம், ஸ்ரீநகர், மிசோரமில் நடைபெற்று வரும் பணிகளை அவர் சுட்டிக்காட்டினார். சத்தீஸ்கரின் ராவ்காட், மத்தியப் பிரதேசத்தின் தண்டா சாலை ஆகிய இடங்களை ரயில் கட்டமைப்புடன் இணைத்த சமீபத்திய சாதனை குறித்தும் திரு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328070&reg=48&lang=2

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328151) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada