இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 7:29PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர் டி64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தடகளப் போட்டியில் அவரது செயல்பாடு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் மற்றுமொரு தருணத்தை உருவாக்கியுள்ளதாகத் திரு மோடி குறிப்பிட்டார். அஜய் குமார் தொடர்ந்து புதிய எல்லைகளைக் கடந்து, மேலும் பல வெற்றிகளைப் பெறுவார் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 400 மீட்டர் டி64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்கு வாழ்த்துகள்! தடகளப் போட்டியில் அவரது செயல்பாடு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் மற்றுமொரு தருணத்தை உருவாக்கியுள்ளது. அவர் தொடர்ந்து தடைகளைத் தாண்டி, இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327594®=3&lang=1
***
AD/SV/RJ