வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஜெர்மனி இடையேயான வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 5:08PM by PIB Chennai

இந்தியா-ஜெர்மனி நாடுகளிடையே, வர்த்தகம், முதலீடு, தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், அக்டோபர் 22-ம் தேதி பெர்லினில் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அந்நாட்டின் பொருளாதார விவகாரங்கள், எரிசக்தித் துறை அமைச்சர் திருமதி கேத்தரினா ரீச்சுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார்.

ஜெர்மன் வெளியுறவுக் கவுன்சிலில் உள்ள இந்திய மையத்தின் தொடக்க விழா, இந்தியா-ஜெர்மனி வர்த்தக வட்டமேசை மாநாடு, பெர்லின் சர்வதேச   கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சந்திப்பின் போது, திரு பியூஷ் கோயல் - திருமதி ரீச்சும்,  தொழில்துறை ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடுகளை விரிவுபடுத்துவதில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் செயல்பாடுகள்  குறித்தும் விவாதித்தனர்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய அமைச்சர், வளர்ச்சியை விரைவுபடுத்துவது, ஒரு புதிய வர்த்தக சகாப்தத்தை உருவாக்குவது குறித்தும், திருமதி ரீச் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தொழில்துறை யதார்த்தமாக மாற்றுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327429&reg=3&lang=1   

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328033) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati