பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற பாவ்னா சௌத்ரி - பூஜா ஜத்யன் இணைக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 6:58PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வில்வித்தையில், மகளிர் 'ரிகர்வ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் முதல் பதக்கத்தைப் பெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற பாவ்னா சௌத்ரி -  பூஜா ஜத்யன் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

இவர்களது இந்த சாதனை, வில்வித்தையில் ஆர்வம் கொண்ட பலருக்கு ஊக்கமளிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்,பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வில்வித்தையில், பாவ்னா சௌத்ரி - பூஜா ஜத்யன் இணை வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்!

இப்போட்டியில், மகளிர் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள். இவர்களது இந்த சாதனை, வில்வித்தையில் ஆர்வம் கொண்ட பலருக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர்".

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327554&reg=3&lang=1

(Release ID: 2327554)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327708) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam