இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 3:37PM by PIB Chennai
இந்திய கடற்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு கடற்படை ஆகியவற்றுக்கு இடையிலான 'இந்திரா 2026' இருதரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கடற்படைக் கப்பலான சஹ்யாத்ரி, 2026 அக்டோபர் 20 அன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கிலிருந்து புறப்பட்டது. இந்தப் பயிற்சியானது துறைமுகம், கடல் என இரண்டு கட்டங்களை கொண்டிருந்தது. துறைமுகக் கட்டத்தில், முக்கியத் தலைவர்களின் கலந்துரையாடல்கள், துறைசார் நிபுணர் பரிமாற்றங்கள், செயல்பாட்டு ஒத்திசைவு நடவடிக்கைகள், விளையாட்டுப் போட்டிகள் கலாச்சாரப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து கடல் கட்டத்தில், ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு, ஹெலிகாப்டர் செயல்பாடுகள், மருத்துவ வெளியேற்றப் பயிற்சிகள் ஆகியவை இடம்பெற்றன. இந்தச் செயல்பாடுகள், இரு படைப்பிரிவுகளுக்கும் கடலில் ஒருங்கிணைந்த நடைமுறைகளை வலுப்படுத்த வழிவகுத்தன. இந்திரா 2026 பயிற்சியின் வெற்றிகரமான நிறைவு, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீடித்த கடல்சார் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327353®=3&lang=1
***
SK/PLM/SH