இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 7:24PM by PIB Chennai
போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் வெறும் பொருட்களை விற்காமல், இந்தியாவில் தயாரித்து, முதலீடு செய்து வளர வேண்டும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் பாதை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அழைப்பு விடுத்தார்.
இந்திய-போலந்து வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் போலந்தின் தூய்மை ஆற்றல் மற்றும் சுரங்கத் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும் என்றார். செயற்கை நுண்ணறிவு , குவாண்டம் கணினியியல் மற்றும் விண்வெளித் துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்த 'புத்தொழில் பாலம்' மற்றும் ''புத்தாக்க வழித்தடம்' உருவாக்க அவர் யோசனை தெரிவித்தார். இந்தியா- போலந்து இருதரப்பு வர்த்தகத்தை மேலும் இரட்டிப்பாக்கி, உலகளாவிய தீர்வுகளை உருவாக்க இணைந்த செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326831®=3&lang=1
****
SK/VK/RJ