இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 9:33PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் நீச்சல் பிரஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்துள்ள ஹிமான்ஷு நந்தலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ள பிரதமர், ஹிமான்ஷு நந்தலின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்துள்ளார் ஹிமான்ஷு நந்தல்!, 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் நீச்சல் பிரஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி11 பிரிவில் மிகச் சிறந்த நேரத்துடன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. ஹிமான்ஷு நந்தலின் எதிர்கால முயற்சிகள் வெற்றிப் பெற நல்வாழ்த்துகள்”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326263®=3&lang=1
***
SS/LN/RJ